லொறி – மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை வாகனேரி பிரதான வீதியின் பால்பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று(12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சந்தைக்கு உறவினர் செல்வதற்காக அவரை திருமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பேருந்து தரிப்பிடத்திற்கு விட்டுவிட்டு மீண்டும் வாகநேரி நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் வாகநேரியிலிருந்து கிறவல் ஏற்றி வந்த லொறி எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த இளைஞன் மீது மோதிய நிலையில் இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் சாரதியை கைது செய்ததுடன் குறித்த லொறியினை பொலிசார் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *