தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த கப்ரக வாகனம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
குறித்த சம்பவமானது சட்ட விரோதமான முறையில் கப்ரக வாகனத்தில் மணல் ஏற்றி பயணிப்பதாக தர்மபும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாகவே குறித்த துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

