இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று(08) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58ஆவது ஐ.பி.எல். லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
மே 11ஆம் திகதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

