டெங்கொழிப்பு வாரத்தினை முன்னிட்டு
கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாகனேரி கிராம சேவகர் பிரிவிலுள்ள கோகுலம் வித்தியாலயம் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலக வளாகம் என்பன சிரமதானப்பணி மூலம் சுத்தம் செய்யப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வாகனேரி வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி குழுத்தலைவருமான இளையதம்பி பார்த்தீபன் தலைமையில் குளத்துமடு, குடாமுனைக்கல் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியின் போது, கிராம மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட குப்பை கூழங்கள் அகற்றப்பட்டதோடு, டெங்குநோய் பரவக்கூடிய வகையில் காணப்பட்ட இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
அத்தோடு, டெங்குநோய் பற்றிய விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

