யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவதற்கான இயந்திரம் புனரமைத்து திறந்து வைக்கப்பட்டது.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 72வது ஆண்டு பழைய மாணவர்களால் நடத்தப்படும் தண்ணீர் எம்எச்சி72 செயற்றிட்டத்தின் திறப்பு விழா நிகழ்வில் யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குடிநீர் சவர்த்தன்மைமிக்கதாக காணப்படும் நிலையில் குறித்த இயந்திரத்தால் புகையிரத நிலையத்திற்கு வருபவர்களும் புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்களும் பயன்பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


