திருகோணமலை மாவட்ட சுய உதவிக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுய உதவிக் குழுக்களின் அங்கத்தவர்களுக்கான கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக மேலதிக அரசாங்க அதிபர் விரிவாக கேட்டறிந்தார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், சுய உதவிக் குழுக்கள் பிரதேச மட்டத்தில் மேலும் திறம்படவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலும் செயல்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால் அவற்றை இத்தகைய கூட்டங்களில் முன்வைப்பதன் மூலம் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *