சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டமானது எதிர்வரும் 03ம் மாதம் 08ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் மகளிர் தின நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை மகளிர் பணியகத்தின் கீழ் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் சிறந்த பெண் தொழில்முனைவோர் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
அந்தவகையில் மாவட்ட மட்டத்தில் காணப்படும் பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நேர்முகத் தெரிவிற்கான மதிப்பீட்டு உத்தியோகத்தர்களாக மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

