ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரையில் இதுவரையில் 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, ரயில் விபத்துக்கள், நீரில் மூழ்கியமை, விஷம் கொடுக்கப்பட்டமை, அங்கீகரிக்கப்படாத மின்கம்பிகளில் சிக்கியமை போன்ற காரணங்களால் யானைகளின் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
இதேநேரத்தில் அண்மைக் காலங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

