கொங்கோவில் எபோலா: 6,000 பேர் பலி!

கிழக்கு கொங்கோவில் வேகமாகப் பரவிவரும் எபோலா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

வரலாற்றில் மிக மோசமாகவும், வேகமாகவும் பரவும் எபோலா பாதிப்பு இதுவாகும். கொங்கோ சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 12,021 பேரில், சுமார் ஐம்பது சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு கொங்கோவின புனியா நகருக்கு வடக்கே சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள இகா-பேரியர் எனும் சுரங்க நகரத்தில் இராணுவத்திற்கும் – கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இன்றுக் காலை மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது. இதனால்இ மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்து புனியா நகரை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

புனியா வடகிழக்கு இத்தூரி மாகாணத்தின் தலைநகராகவும், எபோலா தடுப்பு நடவடிக்கைகளின் முக்கிய மையமாகவும் திகழ்கிறது.

இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலால் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குத் தடையாக உள்ளன. மீட்புக் குழுக்கள் சில பகுதிகளைச் சென்றடைய முடியவில்லை.

வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்காணிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சை மையங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகஇ உலக சுகாதார அமைப்பின் எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முகாமையாளர் டாக்டர் கேத்தரின் ஸ்மால்வுட் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *