வாகரையில் மக்கள் நலன் கருதிய நடமாடும் சேவை

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன் கருதி, பல்வேறு அரச சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் விசேட நடமாடும் சேவை நேற்று(26) நடைபெற்றது.
வாகரை உதவி பிரதேச செயலாளர் பிரகலாதன் மதுமிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட பிரதி பதிவாளர், பதிவாளர் அற்புதராசா மற்றும் பிரதேச செயலகத்தின் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கினர்.
தமது அடிப்படைத் தேவைகளுக்காக நீண்டதூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில் பின்வரும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன:
காலந்தாழ்த்திய பிறப்புப் பதிவுகள் 79 வழங்கப்பட்டது.
20 தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் மற்றும் புதிய பதிவுகள், திருமணப் பதிவுகள் தொடர்பான சட்ட ரீதியான வழிகாட்டல்கள், பொலிஸ் முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்கல்.
பிரதேச செயலகத்தின் இந்த முயற்சியினால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தமக்குத் தேவையான ஆவணங்களை இலகுவாகப் பெற்றுக்கொண்டதுடன், அதிகாரிகளிடம் நேரடியாகத் தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் கூடியதாக இது அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *