கிளிநொச்சியில் வாழைக்குலை விலையில் வீழ்ச்சி; வாழைச்செய்கையாளர்கள் பாதிப்பு 

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15ரூபா தொடக்கம் 20ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்திச் செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலையில் கொண்டு சென்று சந்தையில்  கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *