ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்சிக என்பவருக்குச் சொந்தமான சட்டவிரோத சொத்துகள் விசாரணை செய்யும் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசேட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அளுபோமுல்ல பகுதியில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வீடும், காணியுமே முடக்கப்பட்டுள்ளன.

