இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டத்தின் கீழ் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு நேற்று(07) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “நல்லிணக்கத்துக்கான உறவுப் பயணம்” எனும் கருப்பொருளில் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்றது.

இவ் வேலைத்திட்டத்தில் அனுராதபுர மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர் கழகத்தினை சேர்ந்த சகோதர மொழி பேசும் இளைஞர்கள் ஆறுமுகத்தான் குடியிருப்பில் ஆறு நாட்கள் இங்குள்ள இளைஞர் கழக அங்கத்தவர்களின் வீடுகளில் தங்கியிருந்து எமது கலை கலாசாரம் பண்பாடு விழுமியங்களை அறிந்து கொண்டு சகோதரத்துவத்தினை மேம்படுத்தும் வகையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கிஸ்கந்தமுதலி வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் சஜீவ் தலைமையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு விபுலானந்தா இளைஞர் கழக தலைவர் சுவர்ணாஸ் மற்றும் கழக அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் செயல்பாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு நாள் தங்கி இருந்து கலை கலாசார நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வகையில் வருகை தந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுராதபுரம் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையிலான கலாசார விளையாட்டு நிகழ்வு ஏறாவூர் பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு  கிராமத்தில் காளி கோவில் மைதானத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திரிந்து சமன் ஹென் நாயக்க கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட  உதவி பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட அதிகாரிகளான சசிகுமார், தயாசீலன், விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுராதபுர மாவட்ட  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள், ஏறாவூர்ப்பற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு
கிராம மக்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *