இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷம்

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில்

 

ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

 

ரிஷபம்

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

 

மிதுனம்

இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்மறை சிந்தனைகள் பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

 

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப்போய் பொல்லாப் ஆக போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

 

சிம்மம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

 

கன்னி

வழக்கு சாதகமாக தீர்ப்பு வரும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

 

விருச்சிகம்

பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.வெளியூரிலிருந்து வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

தனுசு

உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள்.

 

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகும் இளமையும் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

 

கும்பம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர்

 

தவறாக பேசினாலும் அதற்காகவருத்தப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகிமுடியும் நாள்.

 

மீனம்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்ப் போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *