இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (31) திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (30) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இன்றைய சந்தை நிலவரப்படி தங்கத்தின் புதிய விலைப் பட்டியல் படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை காணப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் விலை அதிகரிப்பை நோக்கி நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

