நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் பருத்துறை பிரதேச சபைக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தை ஆதரிக்குமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முள்ளியான் 12 ஆம் வட்டார வேட்பாளர் மரியாம்பிள்ளை வசந்தகுமார் தெரிவித்துள்ளார்
மேலும் அவர்கருத்து தெரிவிக்கையில்,
எமது கிராமம் ஒரு நீண்ட பிரதேசமாகும்.இதற்கு முன்பு இருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் அபிவிருத்தி பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்கவில்லை ஆகையால் எமது 12ம் வட்டாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியோடு இணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றேன்
மக்களாகிய நீங்கள் ஜனநாயகம் நிறைந்த இந்த நாட்டில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் எங்களை ஆதரிப்பீர்களாக இருந்தால் பிரதேச சபையின் அதிகாரங்களுக்கு அமைய நாம் எமது வட்டாரத்தையும்,கிராமங்களையும் 100% வீதம் அபிவிருத்தி செய்வோம்
ஆகவே உங்களது தெரிவு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்

