கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி விவேகானந்தர் நகர் பகுதியில் நேற்று இரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவர் கிளி நொச்சிவைத்திய சாலையில் இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் ஒருவர் யாழ் போதன வைத்தியசாலையில் மற்றும் ஒரு நபர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேல் அதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது முற்பகை காரணமாக ஏற்பட்ட தொலைபேசி உரையாடல் முற்றியதன் காரணமாகவே குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கூறிய ஆயுதங்கள் தடையை பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்படவில்லை குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

