முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றன.
குறித்த நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த, காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அங்கவீனமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக தீபம் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

