அமெரிக்காவின் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் டியேகோவில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய மையத்தில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மசூதியின் நுழைவாயிலில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரி உட்பட 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

 

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

 

ஆனால், சம்பவம் நடந்த மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன், 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டு தற்கொ-லை செய்துகொண்டனர்.

 

இருவரும் மசூதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *