கடமையில் இருந்தபோது போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் எட்டு பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
களுத்துறை தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, நேற்று (19) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, போதைப்பொருட்களைப் பயன்படுத்திய நிலையில் கடமைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒன்பது பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

