யாழ்ப்பாணத்தில் 497 பேருக்கு டெங்கு பாதிப்பு – பிரதீபன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று முன்தினம் (19) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர், 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 497 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்காத வகையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *