மஸ்கெலியாவில் பலாக்காய் பறிக்கச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட ராணி பிரிவில் பலாக்காய் பறிக்கச் சென்ற தொழிலாளி ஒருவர் மரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 68 வயதுடைய முத்துராமன் கிருஷ்ணசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தோட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், தனது விவசாயத் தோட்டத்தில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காயை பறிக்க முயன்றபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மரத்தின் கீழ்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *