மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த சகஸ்ரநாம 1008 சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனியும் இடம்பெறவுள்ளன.
இம் மாதம் 19ம் திகதி திங்கட்கிழமை பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
இப் பால்குடப்பவனி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பிய அடியவர்கள் முன்கூட்டியே தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியவர்கள் அனைவரையும் வருகை தருமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுக்கின்றனர்.

