வெசாக் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 15,000 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்க15,000 தன்சல்கள் இதுவரை பதிவுள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறுகையில், தன்சல்களை பதிவு செய்வதற்குத் தொடர்ந்து சந்தர்ப்பம் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் சில பரவி வருவதால், தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதற்கிடையில், வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகரித்துள்ள போதிலும், விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *