அம்பாறைமாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் செலோன் கிறீன் லைஃப் பிளான்டேசன் நிறுவனத்தின் 141 வது கிளை திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கட்டடத்தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் செலோன் கிறீன் லைஃப் பிளான்டேசன் இன் பொது முகாமையாளார், வலய முகாமையாளர், பிராந்திய முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் ஊழியர்கள், ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர்கள், ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்கள், அதிபர்கள், விவசாய சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் குறித்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றி, பிளான்டேசன் செயற்பாடுகள், பயிரிடப்படும் பயிர் வகைகள், ஏற்றுமதி தொடர்பான விபரங்கள், அதற்கான வாடிக்கையாளர்களின் விபரங்கள், சட்ட ரீதியான ஆவணங்கள் போன்ற விடயங்கள் பற்றி தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்றதுப் குறிப்பிடத்தக்கது.
இப்பிராந்திய காரியாலயம் ஊடாக இப்பிரதேச மக்கள் பெறும் நன்மை தொடர்பாக தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

