அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனுர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி  மணல்யார் அமைத்து மணல் வியாபாரத்தில் ஈடுபட்டசந்தேக நபர் ஒருவர்பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்

அதே பகுதியில் இருந்து அனுமதி பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் 28 கியூப் மணலும் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சாரதி போலீஸ் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்கள் நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *