யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்கு அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் வயிற்றுக் குத்துக் காரணமாக இன்று(23)அவசரமாக பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
வயிற்றுவலியால் துடித்த சிறுமியின் அவசர நிலையை உணராது அசமந்த போக்காக தாதியர்கள் இருப்பதை அறிந்த பெற்றோர் அருகில் உள்ள பளை வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்
சிறுமியை பரிசோதித்த பளை வைத்தியசாலை வைத்தியர் சிறுமிக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனையாக உள்ளதால் நோயாளர் காவு வண்டி மூலம் அவசரமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்
குறித்த வைத்தியசாலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தனது பிள்ளைக்கு உயிராபத்து நிகழ்ந்தால் இவர்களே காரணமெனவும் சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

