யாழ் மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம்

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் சிரமதானம், மர நடுகை மற்றும் கண் பரிசோதனை முகாம் என்பன மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று(14) காலை 08.45 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டதனைத் தொர்ந்து மர நடுகையானது பழைய பூங்காவிலும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அனுசரனையில் உத்தியோகத்தர்களுக்கான கண் பரிசோதனை முகாமானது மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்திலும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்சினி, பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *