வெனிசுவேலாவில் இரட்டை பூகம்பம்; பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு

வெனிசுவேலாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் ஜூன் 24 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 3,360-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் இன்னும் 172-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

மிக முக்கிய துறைமுகம் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள லா குவைரா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸிலும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

இதற்கிடையில், இடிபாடுகளிலிருந்து 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் சிறப்பு மீட்புக் குழுக்கள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்களை அனுப்பியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபை மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *