யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அன்றாடம் யாழ் ராணி புகையிரதத்தில் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஆண்டு நிறைவு நிகழ்வு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் நடைபெற்றது.
இன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் புகையிரத திணைக்களத்தின் வடமார்க்க மேற்பார்வையாளர் வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது கேக் வெட்டி நான்காவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டதுடன், யாழ் ராணி புகையிரத சேவை வடக்கு மக்களின் போக்குவரத்தில் ஏற்படுத்திய பங்களிப்பு நினைவுகூரப்பட்டது.
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பணிக்காக பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்களுக்கு குறைந்த செலவில் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்குவதில் யாழ் ராணி புகையிரத சேவை முக்கிய பங்காற்றி வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

