விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகினால் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கலாநிதி ரோஷனி திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, கலாநிதி ரோஷனி திசாநாயக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியாக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் முன்னர் பணியாற்றியுள்ளார்.

