இன்றைய நாளுக்கான ராசிபலன்!

மேஷம்:
சந்திராஷ்டமம் காரணமாக பயணம், பணப் பரிவர்த்தனை, முக்கிய முடிவுகள் மற்றும் முதலீடு தொடர்பான விடயங்களில் கவனமாகச் செயல்படவும். உங்கள் முயற்சிகளையும் திட்டங்களையும் அதிகரிப்பது நன்மை தரும்.

ரிஷபம்:
புதிய திட்டங்களுடன் செயல்படுவதும், புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதும் சாதகமான பலனைத் தரும். புனித தலங்களுக்குச் செல்வது மன அமைதியை மேம்படுத்தும். சட்டப் பிரச்சினைகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்:
ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது மனதுக்குப் பிடித்த பணிகள் கிடைக்கலாம். வேலை அல்லது தொழிலை மேம்படுத்தும் புதிய திட்டங்கள் உருவாகும்.

கடகம்:
மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் செயல்கள் உடனடி பலனைத் தரும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது.

சிம்மம்:
பரபரப்பான நாளாக இருக்கும். ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் சில தடைகள் ஏற்படலாம்.

கன்னி:
சற்று பரபரப்பான நாளாக அமையும். ஆன்மிகத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேற முடியும்.

துலாம்:
பல வகைகளிலும் நன்மை கிடைக்கக்கூடிய நாள். வேலை தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படலாம். புதிய திட்டங்களுடன் செயல்பட்டால் சிறந்த வெற்றியைப் பெற முடியும்.

விருச்சிகம்:
நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை மற்றும் தொழில் தொடர்பான விடயங்களில் கவனத்துடன் செயல்படுவது தனவரவை அதிகரிக்க உதவும்.

தனுசு:
எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் சிறிய அளவிலான ரிஸ்க் கணிசமான லாபத்தைத் தரக்கூடும். வழக்கமான செயல்பாடுகளிலிருந்து மாறுபட்டு புதிதாக ஏதாவது செய்ய முயற்சிப்பீர்கள்.

மகரம்:
ஓரளவு சாதகமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கலாம். திட்டமிடுவதன் மூலம் பணிகளை விரைவாக முடிக்க முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

கும்பம்:
உடல்நலனில் கவனம் தேவை. வானிலை மாற்றங்களால் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். உணவுப் பழக்கத்தில் கவனக்குறைவைத் தவிர்க்கவும். வேலை மற்றும் தொழில் சார்ந்த விடயங்களில் சூழல் சாதகமாக இருக்கும்.

மீனம்:
லாபகரமான நாளாக அமையும். தொழில் தொடர்பாக ரிஸ்க் எடுப்பதில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம். பொறுமையும் கனிவான அணுகுமுறையும் கடினமான சூழல்களைக் கடந்து பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *