கொடிகாமத்தில் இருவேறு விபத்துகளில் இருவர் பலி

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி மற்றும் வரணி பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, வரணி பகுதியில் வேகனோர் ரக காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற முதியவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துகளுடன் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இரு விபத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *