குடா கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

களு கங்கையின் குடா கங்கை உப-நதிப் படுகையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, களு கங்கைப் படுகைக்குள் நீர்ப்பிடிப்புத் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நதி நீர்மானிகளின் நீர் மட்ட நிலவரங்களின் பகுப்பாய்வுகளுக்கு அமைய, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலின்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் வெள்ளப் சமவெளி சார்ந்த தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் கிளை வீதிகள் நீரில் மூழ்கும் கடும் அபாயமும் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *