‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பிரதான ‘அத்தம’ தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (19) முன்னெடுக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வை, பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கிண்ணியா மாஞ்சோலை கடற்கரைப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதுடன், பொது இடங்களில் காணப்பட்ட கழிவுகளும் அகற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சுத்தமான, பசுமையான மற்றும் நிலைத்தன்மைமிக்க கிண்ணியாவை உருவாக்கும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

