மட்டு செட்டிபாளையம் கடற்கரையில் மீன் வாங்க சென்ற மேசன் தொழிலாளியான என் மீது சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடியில் ஈடுபட்டுவரும் ஜீவன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கடும் கவலை தெரிவித்தார்
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பாதிக்கப்பட்டவரான கோபிநாத் இவ்வாறு தெரிவித்தார்.
செட்டிபாளையத்தை சேர்ந்த நான் கடந்த 16ம் திகதி கடற்கரைக்கு மீன் வாங்க சென்ற என்னை சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டுவரும் ஜீவன் என்பவர் நீ என்னத்துக்கு வந்த நீ சட்டவிரோத சுருக்கு வலையை காட்டிக் கொடுக்கவா என கேட்டு அடியாட்களை அழைத்து என்னை தாக்கியதில் நான் படுகாயமடைந்து நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு சென்று பின்னர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.
இந்த நிலையில் என்னை தாக்கிய அடியாட்கள் இந்த சட்டவிரோத சருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இவர்கள் என் மீது கை வைக்க எந்த உரிமையும் இல்லை
அதேவேளை ஜீவன் என்ற மீனவர் அரச காணி அவருடைய சொந்தகாணி மாதிரி கடற்கரை பகுதியை தனது காணி என அவர் அங்கு சட்டவிரோதமாக கடற்கரையில் வீதி அமைத்து வீடுகட்டி அந்த வீதியால் எவரும் பிரயாணிக்க முடியாது தடுத்து வருகின்றார்.
இவ்வாறு அவர் பெரும் அட்டகாசம் புரிந்து வருகின்ற அவர் தான் பார்க்காத பொலிசாரா என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனவே என் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது சட்ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேவேளை காத்தான்குடியில் இருந்து களுவாஞ்சிக்குடிவரை உள்ள கடற்பகுதியில் 25 க்கும் அதிகமான சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்கின்றனர் இந்த சட்டவிரோத சுருக்கு வலையை பாவிப்பவர்களை பிடிக்க வேண்டிய கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் அசமந்த போக்கில் இருந்து வருகின்றனர்.
இந்த அதிகாரிகள் இந்த சட்டவிரோத சுருக்குவலையை ஏன் பிடிப்பதில்லை? இதற்கு காரணம் என்ன? இந்த சட்டவிரோத மீன்பிடி செயற்பாட்டால் எனக்கு நடந்ததைபோல நாளைக்கு இன்னொருவருக்கு நடக்கலாம் கொலையிலும் முடியலாம் எனவே சம்மந்தபட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிடில் ஊர்மக்கள் ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை உரிய திணைக்கள உயர் அதிகாரிகளிடம் வழங்கவுள்ளோம்.
அதேவேளை இந்த நல்லாட்சி காலத்தில் இலஞ்சம் ஊழல் இடம்பெறுகின்றது இந்த ஊழலால் இந்த நாடே அழியும் எனவே ஜனாதிபதி இந்த ஊழல் செய்யும் அதிகாரிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றார்.

