இந்திய பாலம் 13 திட்டத்தின் முதல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர பாலங்களில் முதலாவது பாலமான மாத்தளை மொரகஹகந்த பாலத்திற்கான அடிக்கல்லை இந்திய தூதரக உயர்தணிகர் எச்.இ. சந்தோஷ் ஜா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) சம்பிராயபூர்வமாக நாட்டிவைத்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட இணைப்பை உருவாக்குதல் இந்தியாவின் திட்டத்தில் தித்வா புயலைத் தொடர்ந்து  இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை முழுவதும் உள்ள 13 நிரந்தர பாலங்களை நிர்மானிக்க திட்மிடப்பட்டது

இந்த திட்டம் அவசரகால மறுசீரமைப்பிலிருந்து நிரந்தரமான, மீள்திறன் கொண்ட உள்கட்டமைப்பிற்கு மாறும் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது என இந்திய தூதரக உயர்தணிகர் எச்.இ. சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *