யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று (20) பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
கடைக்கு வந்த நபர் பொருட்களை வாங்குவது போல் பாசாங்கு செய்துவிட்டு யாரும் பார்க்காத நேரத்தில் அந்த கடையில் இருக்கும் கைபேசியை திருடிச் சென்றுள்ளார். இந்த விடயம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
கடையின் உரிமையாளரால் இந்த விடயமானது சாவகச்சேரி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

