நுவரெலியா – ஹட்டன் பகுதிகளில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வலயத்தின் 156 பாடசாலைகளில் 4 பாடசாலைகளுக்கும், ஹட்டன் வலயத்தின் 150 பாடசாலைகளில் 9 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களின் ஏனைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *