கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி இரண்டாம் இடம்!

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி 2 ஆவது இடம்பிடித்துள்ளது.

நடிகரும், ரேசருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேசிங் அணி மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த ரெட்ஆண்ட் ரேசிங் அணிகளின் கூட்டணியில், அஜித் குமாரின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக தூரம் காரை இயக்குபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில், அஜித் குமார் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5 ஆவது இடம்பிடித்தது.

GT3 Pro-Am பிரிவில் 2 ஆம் இடம்பிடித்த வெற்றியை தொடர்ந்து, அஜித் குமார் இந்திய தேசிய கொடியை ஏந்தி கொண்டாடினார்.

அஜித் குமார் ரேசிங் அணி கார் பந்தயங்களில் கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் துபாய் ஆட்டோட்ரோம், இத்தாலியின் முஜெல்லோ சர்க்யூட், பெல்ஜியத்தின் சர்க்யூட் டி ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் மற்றும் ஸ்பெயினின் சர்க்யூட் டி பார்சிலோனா – கேடலூனியா உள்ளிட்ட 24 மணி நேர கார் பந்தய தொடர்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளது.

சமீபத்தில், லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அந்த பந்தயத்தில் அஜித் குமார் 38 ஆவது இடத்தை பிடித்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக, பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயத்தில் 2 ஆவது இடம் பிடித்து அஜித் குமார் ரேசிங் அணி அசத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *