வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிப் பாசறை ஆரம்பம் 

கிளிநொச்சியில் வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான சுற்றாடல் முன்னோடிப் பாசறை ஆரம்பமாகியுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பயிற்சி மண்டபத்தில் இன்று(15) காலை  குறித்த நிகழ்வு ஆரம்பமாகியது.
இன்றும் நாளையுமாக இரண்டு நாட்கள் குறித்த முன்னோடிப்பாசறை நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம. பற்றிக்டிறஞ்சனும், கௌரவ விருந்தினர்களாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திரு. ம. சிவகுமாரும், வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. க.அ. சிவனருள்ராஜாவும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *