அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களை பெற்றது. டேவிட் மில்லர் 142 ஓட்டங்களையும், அணித்தலைவர் டெம்பா பவுமா 103 ஓட்டங்களையும் பெற்றனர்.

366 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 333 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 84 ஓட்டங்களை பெற்றனர்.

இதன்மூலம் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா, தொடரில் 2-0 என முன்னிலை பெற்று ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *