நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் காஞ்சன தசநாயக்க இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.
தனது குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு கோரி பெண் விமானி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாமிக கருணாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து, அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

