முதியோரின் அனுபவம் நாட்டின் முக்கிய வளம் – பிரதமர்

சமூகத்தின் உண்மையான அடித்தளமாக இருந்துவரும் சிரேஷ்ட சமூகத்தினரின் அறிவு, அனுபவம், வழிகாட்டல் ஆகியன தேசத்தின் எதிர்காலப் பாதையை ஒளிமயமாக்கும் மிகவும் முக்கியமான வளங்களாகும்  என பிரதமர் ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூகத்தின் உண்மையான அடித்தளமாக இருந்துவரும் சிரேஷ்ட சமூகத்தினரின் அறிவு, அனுபவம், வழிகாட்டல் ஆகியன தேசத்தின் எதிர்காலப் பாதையை ஒளிமயமாக்கும் மிகவும் முக்கியமான வளங்களாகும்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது வெறும் பௌதிக, பொருளாதார அபிவிருத்தியை மாத்திரமல்ல.

ஒரு நற்சமூகத்தின் உண்மையான நாகரிகமானது, அச்சமூகத்தில் சிரேஷ்ட சமூகத்தினருக்குக் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு, கௌரவம், நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

எனவே, முதியோர் சமூகத்துக்கான அரசாங்கத்தின் பொறுப்பை வெறும் நிவாரணக் கட்டமைப்புக்குள் மாத்திரம் வரையறுக்காது, அவர்களின் மனித உரிமைகள், சுதந்திரம், சமூகக் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முழுமையான தேசியப் பொறுப்பாக நிறைவேற்ற நமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *