சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 13 முக்கிய மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் அரசுக்கு 5.7 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அதிக விலையுடைய 13 முக்கிய மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டின் மூலம் அரசுக்கு கிடைத்த லாபத்தை 5.7 பில்லியன் ரூபாவாக மதிப்பிட முடியும்.
அத்துடன், பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் மருந்துகளின் அடிப்படையில் அவர்களுக்கான இலாபமும் மாறுபடுகிறது.
நாங்கள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்த மருந்துகள் அனைத்தும் நீண்டகால அடிப்படையில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

