1,270 கிலோ சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

பத்தலங்குண்டுவ – கல்லாறு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,270 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான 26 மூட்டைகள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கடற்படையினரின் நடவடிக்கையைக் கவனித்த கடத்தல்காரர்கள் குறித்த மூட்டைகளை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *