பல பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

பொலிஸ் அதிகாரிகள் பலரின் இடமாற்றங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசியக் பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.

அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடிதுவக்கு,போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) அசோக தர்மசேன ஆகியோரின் இடமாற்றங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (01) நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான கோரிக்கையை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB) பணிப்பாளர், இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பெண் பொலிஸ் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *