கோழி இறைச்சி, முட்டை விலை குறித்து எச்சரிக்கை

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயரக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கையில், விலங்குகளின் தீவனத்திற்காக சோளத்துக்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி விரைவாக வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் நிலவும் சோளத்துக்கான தட்டுப்பாடு காரணமாக, சிறிய அளவிலான பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதமானோர் இந்தத் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *