சீகிரியாவில் காட்டு யானை தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

சீகிரியா, பலுட்டாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய நபர் ஆவார்.

குறிப்பிட்ட நபர் வீட்டை விட்டு வெளியே வந்த வேளையிலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *