மண்டைதீவில் பணம், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகள் திருட்டு

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு 6ஆம் வட்டாரப் பகுதியில், சுமார் 4 இலட்சம் ரூபா பணமும், வெளிநாட்டு நாணயங்களும், நகைகளும் திருடப்பட்டுள்ளன.

மண்டைதீவு – 6ஆம் வட்டாரம் பகுதியிலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *